Wednesday, April 27, 2011

நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது


குறைந்த காலகட்டத்திலையே முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த கார்த்தி, கிசுகிசுக்களிலும் முன்னணி வகித்தார்.தற்போது அத்தனை கிசுகிசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஆம், கார்த்திக்கு திருமணம் முடிவாகிவிட்டது. பெற்றொர்களால் நிச்சயக்கப்பட்ட இந்த திருமணம் இந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சின்னச்சாமி, ஜோதிமீனாக்ஷி தம்பதியின் மகள் ரஞ்சனி என்பவரை கார்த்தி மணக்கிறார். மனப்பெண் ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்து தங்க பதக்கம் பெற்றவர்.

கார்த்தி, சென்னை கிரசண்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. படித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக் கழகத்தில், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் படிப்பில் எம்.எஸ் பட்டம் பெற்றவர்.

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த கார்த்தி, இயக்குநர் அமீரின் மூலம் பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது.


No comments:

Post a Comment