Friday, April 1, 2011

கலைஞர் காலைத்தொட்டு வணங்கினார் EVKS


ஈரோட்டில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.   திமுக தலைவர் கருணாநிதி இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.


திமுக மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையான விமர்சன அம்புகளை எய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கூட்ட மேடையில் ஏறினார்.   அதுமட்டுமல்லாது முதல்வர் கருணாநிதிக்கு அருகில் அமர்ந்தார்.


அதுமட்டுமா?   முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து தள்ளினார்.

பின்னர் பேச வந்த முதல்வர்,  ‘’பத்திரிக்கைகளில் எல்லாம் இடம்பெறப்போகும் செய்தி இதுதான்.  அதிசயம்!


கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒரே மேடையில்!! என்றுதான் எழுதப்போகிறார்கள்.


இளங்கோவன் இன்று என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.  

நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன் என் மடியில் தவழ்ந்திருக்கிறார்’’ என்று பேசியபோதுஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் எழுந்து முதல்வர் காலைத்தொட்டு வணங்கினார்.



No comments:

Post a Comment