Friday, May 27, 2011

ரஜினி சிங்கப்பூர் செல்வது ஏன்?


நடிகர் ரஜினிகாந்த் மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன்  இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.

 இந்நிலையில் லதாரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்.


அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.

ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று  தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment