Sunday, May 29, 2011

தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்: வெற்றிமாறன்


தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

2007ல் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்திலும், அடுத்ததாக ஆடுகளம் படத்திலும் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆடுகளம் திரைப்படம் 6 தேசிய விருதுகளை வென்றது.

ஆனாலும் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கும் திட்டமில்லை என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மாற்றத்தில் நம்பிக்கை உடையவன். திரும்பத் திரும்ப ஒரே மனிதர்களுடன் பணியாற்றுவது இருதரப்பினருக்குமே போரடிக்கும். மாற்றம் அவசியம். தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்.

பணத்தை சம்பாதிக்கத்தான் படங்களை எடுக்கிறேனே தவிர, விருதுகளைப் பெறுவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment