Sunday, May 1, 2011

பான் கீ மூனின் கோரிக்கை: உலக வல்லரசு இலங்கை நிராகரிப்பு


நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக எவ்வித பதிலையும் அளிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.


நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர்,பான் கீ மூன் விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.


இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுலமாக இருக்கும் என பான் கீ மூன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment