Tuesday, May 31, 2011

ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்


கோவை குறிச்சி சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரஜினிராஜா என்கிற ஆரோக்கியசாமி(40). தற்போது தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு கடன் தொகையை வசூலிக்கும் ஏஜென்ட்டாக பணிபுரிகிறார்.

தீவிர ரஜினி ரசிகர். ரஜினி அரசியல் கட்சி துவங்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும், ரஜினி கட்சிக்கு கொடியை உருவாக்கியும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரது மனைவி ஷோபிகா, ஒரு மகள் வெளியூர் சென்றிருந்தனர்.



நேற்று இவர் வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரது உறவினர்கள் சகாயம், அந்தோணி ஆகியோர் ஆரோக்கியசாமியை சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் தூக்கமாத்திரைகள் சாப்பிட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து சுய நினைவுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் கூறுகையில், ‘ரஜினி காந்த் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருவதை அறிந்து வேதனை அடைந்தேன்.

மனமுடைந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்து வரும் ரஜினிக்கு எனது சிறுநீரகத்தை பொருத்தி குணப்படுத்த வேண்டும். எனது சிறுநீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்என்றார்.


முதலில் நீங்கள் குணமாகுங்கள், மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்என்று மருத்துவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment