Wednesday, June 1, 2011

10 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார்; ராணா படத்தில் நடிக்கிறார் - தனுஷ்



உடல்நிலை பாதிக்கப்பட்டது காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த்மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார்.   அங்கே தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்திருப்பதால் தனி வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.




சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினியின் மருமகன் தனுஷ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்,    விடுமுறைக்கு சென்றதுபோல் ரஜினி குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார் என்றும்10 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.



அவருக்கு உடல்நிலை குணமடைந்து வருவதால் சிறுநீரக மாற்று சிகிச்சை தேவை இல்லை என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.


ரஜினி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும்,   சென்னை திரும்பியதும் ரஜினி ராணா படத்தில் நடிப்பது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment