இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியை இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு யாரும் அசைத்துப் பார்க்கக் கூட முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கூறியுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இந்திய 2ம் நிலை அணியின் அபாரமான ஆட்டத் திறன் குறித்து பிளட்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக சமீபத்தில்தான் பொறுப்பேற்றார் பிளட்சர். இந்த நிலையில் மேற்கு இந்தியத் தீவுகளை இந்திய இளம் அணி கலக்கி வருவது அவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வென்றுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தியாவிடம் மிகச் சிறந்த திறமை உள்ளது. அதன் வெளிப்பாடே இந்த வெற்றி. மிக மிக ஆரோக்கியமான நிலையில், இந்திய கிரிக்கெட் தற்போது உள்ளது. இன்னும் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது.
கிரிக்கெட்டில் 5 ஆண்டு, அதுவும் பத்து ஆண்டு என்பது மிக நீளமானது. ஆனால் இந்தியாவின் திறமையைப் பார்த்தால் இது மிகச் சாதாரணம் என்பது மட்டும் எனக்குத் தெரிகிறது.
கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் சரி, ரோஹித் சர்மாவும் சரி இந்திய அணிக்கு மிக் சிறந்த பங்களிப்பை மேற்கு இந்தியத் தீவுகளில் அளித்து வருகின்றனர் என்றார் பிளட்சர்.

No comments:
Post a Comment