உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ளது மாத்ரி சதன் ஆசிரமம். இந்த ஆசிரமத்தை சேர்ந்த சாமியார் சுவாமி நிகமானந்தா கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி கங்கை நதியை காப்பாற்றக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவரது உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட சாமியார் நிகமானந்தா விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து, அவரது மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஹரித்துவாரில் உள்ள பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஷர்மா தெரிவிக்கையில் சாமியார் நிகமானந்தா மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது .அதில் சந்தேகம் இருப்பதால் மீண்டும் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை நடத்துவதற்காக மூன்று பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

No comments:
Post a Comment