Wednesday, June 1, 2011

கலைஞர் - 88 : வைரமுத்து, குஷ்பு,லியோனி வாழ்த்தி பேசுகிறார்கள்


தி.மு.க. தலைவர் கலைஞருக்கு நாளை மறுநாள் 88-வது பிறந்தநாள்.   தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கலைஞரின் 88-வது பிறந்த நாள் விழா நாளை (வியாழக்கிழமை) சென்னையில் கொண்டாடப்படுகிறது.

சென்னை காமராஜர் அரங்கில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வி. எஸ்.பாபு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் சுகவனம் எம்.பி., ஆர்.ராஜேந்திரன், சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.


முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி கலைஞர்வாழ்த்து பாடுகிறார்.

கவிஞர் வைரமுத்து, அண்ணா நூலகம் சுப.வீரபாண்டியன், “வள்ளுவர் கோட்டம்என்ற தலைப்பிலும், திண்டுக்கல் லியோனி அறிவாலயம்தலைப்பிலும், நடிகை குஷ்பு திரைக்காவியம்என்ற தலைப்பிலும், அப்துல்காதர் தொல்காப்பிய பூங்காஎனும் தலைப்பிலும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில இளைஞர் அணி துணை செயலாளரும், சென்னை மேயருமான மா.சுப்பிரமணியன் செய்து வருகிறார்.



1 comment:

  1. 88 - நல்ல நம்பர்.... இப்ப போனாச் சிலவேளை அங்கை கஷ்டம் குறைவா இருக்கும்... கூட இருந்து ஜால்ரா அடிக்கிறதுகளாலும் சொல்லலாம்தானே...

    ReplyDelete