அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த இயக்க தலைவர் பின்லேடனை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்தது. தேவையான அதிநவீன ஆயுதங்களை வழங்கியது. பின்லேடனை பிடிக்க உதவும்படி கேட்டுக் கொண்டது. ஆனால், பாகிஸ்தானோ இரட்டை வேடம் போட்டது.
பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என திட்டவட்டமாக மறுத்தன பின்னர் கடந்த 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் குடும்பத்துடன் தங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்க மக்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அமெரிக்காவுடனான நட்புறவை துண்டிக்கும்படி வலியுறுத்தினர். மேலும்,பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்படுவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்படுவதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் ராணுவ தளபதியிடமே அமெரிக்க உளவுத்துறை தலைவர் லியோன் பனிட்டா கொடுத்தார். இதனால் அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகும் நிலை உருவாகி உள்ளது.

No comments:
Post a Comment