Thursday, June 30, 2011

இலங்கையில் கொடூர சித்திரவதை-தாயகம் திரும்பிய மீனவர்கள் கண்ணீ

 இலங்கையின் அனுராதபுரம் சிறையில் தாங்கள் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராமேஸ்வரம் திரும்பிய 23 தமிழக மீனவர்களும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கடலுக்குள் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படைக் காடையர்கள் சிறை பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்திய அரசின் தீவிர நடவடிக்கைக்குப் பின்னர் 23 மீனவர்களையும் நேற்று தலைமன்னார் கோர்ட் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இன்று அவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்.

அவர்களுக்கு 23 மீனவர்களின் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மீனவர்கள் பேசுகையில், தங்களுக்கு அனுராதபுரம் சிறையில் கொடும் சித்திரவதை நிகழ்த்தப்பட்டதாக பரபரப்புடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், எங்களை சிறையில் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கினர். எங்களை சங்கிலியில் கட்டி சிறைக்கு இழுத்துச் சென்றனர்.

சிறையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர்.

எங்களை விடுவிக்கும்போது மீண்டும் எல்லை தாண்டி வந்தால் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினர் என்று மீனவர்கள் கூறினர்.




No comments:

Post a Comment