பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் உள்ள அட்டைகளில் உள்ள செம்மொழி மாநாட்டு இலட்சினை பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு, இந்த வருடம் அச்சடிக்கப்பட்ட வேதியியல், இயற்பியல், பொருளாதாரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலிய பாடப்புத்தகங்களில் உள்ள அட்டைப்படங்களில் தமிழ் செம்மொழி மாநாட்டு அடையாள சின்னம் ( இலட்சினை) மற்றும் சில பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
பச்சை நிற ஸ்டிக்கர்
அடையாள சின்னத்தையும், அதன்கீழ் இடம்பெற்றுள்ள பாடல்களையும் மறைக்க கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடப்புத்தக அட்டைகளில் இடம் பெற்றுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டு அடையாள சின்னத்தை பச்சை நிற `ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜூன் 15ல் புத்தகங்கள்
தமிழ் பாடப்புத்தகங்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டவைதான் இந்த வருடமும் வழங்கப்பட உள்ளன. இவை தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன.
15ம் தேதி பள்ளி திறக்கும்போது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment