Monday, June 27, 2011

இலங்கை தமிழர்களுக்காக பதவியை துறந்தேன் : டி.ராஜேந்தர்


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி சென்ற லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட செயலாளர் கார்மேகராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது நிருபர்களை சந்தித்த டி.ராஜேந்தர்,

’’தமிழகத்தில் தற்போது சினிமாத்துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதில்லை. பெண்கள் சினிமாவிற்கு வந்தால்தான் படம் வெற்றி பெரும். இதனால் சினிமா வளர்ச்சி அடையும். பெண்கள் தியேட்டருக்கு வராததற்கு காரணம் தியோட்டரில் கட்டண உயர்வுதான் காரணம்.



தியேட்டரில் கட்டணத்தைக் குறைத்து பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி அடையும். தேவைப்பட்டால் சமச்சீர் கல்வியில் மாற்றம் செய்து சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும். தற்போது ஆசிரியர்களும், மாணவர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க. தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம். இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் காங்கிரஸின் நடவடிக்கையால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது.
நான் வகித்து வந்த சிறுசேமிப்பு திட்டக்குழு தலைவர் பதவியும் இலங்கை தமிழர்களுக்காகத்தான் விலகினேன்’’ என்று கூறினார்.


No comments:

Post a Comment