Thursday, June 23, 2011

ஜாகீர் கானுடன் என்ன உறவு...? இஷா சர்வானி விளக்கம்!


கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் பாலிவுட் நடிகையும், டான்சருமான இஷா சர்வானி, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன், தனக்கு என்ன உறவு என்பதை விளக்கியுள்ளார். பாலிவுட் நடிகையான இஷா சர்வானிக்கும், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை இஷா சர்வானி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எனக்கும், ஜாகீர் கானுக்கும் எந்த உறவும் கிடையாது. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. இதுபோன்ற வதந்திகள் பற்றி எனக்கு கவலையில்லை. இருந்தாலும் இந்த விஷயத்தால் எங்கள் வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அவர்களை சமாதானம் செய்வதற்குள் எனக்கு பெரும் பாடாகிவிட்டது. சவாலான படங்களில் நடிக்க பெரிதும் ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment