தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜெயலலிதாவின் டெல்லி பயணம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை பிற்பகல் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
14-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து அவர் விவாதிக்கிறார். அன்று மாலையே முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின்போது முதல்வர் ஜெயலலிதா, சோனியா காந்தியை சந்திப்பாரா என்பது குறித்துத் தெரியவில்லை.
2 நாட்கள் டெல்லியில் முகாமிடவுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் பயணம் அரசியல் அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திமுகவுடன் பெரும் உரசலில் உள்ள காங்கிரஸ் கட்சியின் உறவு மாறுமா, அதிமுகவுக்கு அவர் வருவாரா என்பதை ஜெயலலிதாவின் இந்த டெல்லி பயணம் சூசகமாக வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஜெயலலிதா மறந்து விடுவார் என்று எதிரிகளால் கூறப்பட்டு வந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார் ஜெயலலிதா. இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல தான் தொடர்ந்த கச்சத்தீவு வழக்கிலும் தற்போது தமிழக அரசை இணைத்துள்ளார் ஜெயலலிதா. இதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எனவே தனது டெல்லி பயணத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அவர் முக்கியமாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான உதவிகள், மின்வெட்டை சமாளிப்பதற்கான உதவிகளையும் அவர் பிரதமரிடம் கோரவுள்ளார்.
முதல்வரான பின்னர் முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ளவுள்ள முதல் பயணம் என்பதால் இந்த 2 நாள் பயணத்தில் எந்த அளவுக்கு சாதிக்க முடியுமோ அந்த அளவுக்கு சாதனையுடன் திரும்ப ஜெயலலிதா தீவிரமாக உள்ளார் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment