சேலம், காந்தி ஸ்டேடியத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ஒரு நீச்சல் குளம் உள்ளது.
இந்த நீச்சல் குளத்தில், கட்டண அடிபடையில மாணவ மாணவியர்கள், குளிக்கவும், நீச்சல் பயிற்சி எடுக்கவும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்த பள்ளி மாணவிகளில் இருவர் கற்பமடைந்துள்ளதாகவும், அவர்களின் கற்பத்திற்கு காரணம் அங்குள்ள நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன் தான் என்றும், சென்னையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு யாரோ புகார் அனுப்பியுள்ளர்கள்.
அந்த புகாரின் அடிப்படையில், கோவை மண்டல விளையாட்டு மேலாளர் மோகன் என்பவர், நேற்று சேலம் காந்தி ஸ்டேடியத்திற்கு வந்து, அங்குள்ள பணியாளர்களிடமும், ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்த பள்ளி மாணவிகள் கர்ப்பம் என்ற தகவல் சேலத்தில் காட்டுத்தீயாக பரவியது.
நீச்சல் பயிற்சிக்கு பிள்ளைகளை அனுப்பிய பல பெற்றோர்கள் ஸ்டேடியத்திற்கு வந்து விட்டனர்.
பத்திரிக்கையாளர்களும், நீச்சல் குளம் உள்ள காந்தி ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர்.
புகார் கொடுத்தவர்கள் யார் என்பதே தெரியாத நிலையில், புகார் உண்மையானதா என்பதும் தெரியவில்லை.
இந்த சம்பவம் பற்றி, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமார் கூறும்போது, மாணவிகள் கற்ப்பமடைந்துள்ளதாக, மாணவியர்களின் பெற்றோர்கள் யாரும் எங்களிடம் புகார் கூறவில்லை, நேரடியாக சென்னைக்கு புகார் அனுப்பியுள்ளர்கள்.
மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவின் பேரில் இங்குள்ள அலுவலர்களிடமும், ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணை தொடர்பான விவரங்கள் ஏதும் எனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
புகார் உண்மையா..? பொய்யா...? என்பது கூடத்தெரியாமல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் நடத்தியுள்ள இந்த கூத்து, நீச்சல் பயிற்சிக்கு செல்லும் எல்லா மாணவிகளுக்கும், அவமானத்தையும், சங்கடத்தையும் ஏற்ப்படுதியுள்ளது என்று பல பெற்றோர்கள் வருத்தப்பட்டார்கள்.
நம்ம அதிகாரிகள் எப்போதும் பொறுப்போடு நடக்கமாட்டர்கள் என்பது உங்களுக்கு புரியாதா என்ன...

No comments:
Post a Comment