தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட ஆஸ்திரேலிய அரசு இந்தியர்களின் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுள்ளது.
அன்மையில் ஆஸ்திரேலிய அரசு இந்திய வரைபடத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இல்லை. இதற்கு இந்தியா கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தவறான வரைபடத்தை இணையதளத்தில் இருந்து எடுத்தது.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசு அளித்துள்ள விளக்கம்,
இந்திய வரைபடத்தை ஐ.நா. விடம் இருந்து பெற்றோம். அதை சரியாகத் தெரியாமல் இணையதளத்தில் வெளியிட்டுவிட்டோம். இந்த செயலுக்காக நாங்கள் வருந்துகிறோம் என்று கூறியுள்ளது.
இந்திய வரைபடத்தை வாபஸ் பெற்றதற்காக சிட்னியில் உள்ள இந்தியர்கள், இந்திய ஆஸ்திரேலிய கவுன்சில் ஆகியவை மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

நல்லதொரு விடயம். முதலில் ஐநாவைக் கண்டித்து இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும் ..
ReplyDeleteநாம் எல்லாம் ஒன்றும் தெரியாமல் மத்தியரசு கண்டிக்க வேண்டும் , மத்திய அரசு கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். எங்க நண்பா, மத்தியில் ஆளும் அரசுக்கு ஐநாவை கட்டிப்பதற்கு நேரம் இருக்கிறது. அவர்களுக்கு புதிது புதிதாக ஊழல் செய்யவும், ஊழல் செய்த பணத்தை மறைக்கவும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பவும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அடக்கவும், கூட்டணி கட்சிகளை சமாளிக்கவும், எதிர்கட்சிகளின் குடச்சல்களில் இருந்து தப்பவும், உள்கட்சி பூசல்களை சமாளிக்கவும் என்று சிந்திப்பதற்கே நேரம் இல்லையே...! இந்த செய்தி உண்மையில் நமது பிரதமருக்கு தெரியுமா என்பது கூட சந்தேகமே...!?. காரணம் தனக்கு கீழ் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் செய்த உலக மகா ஊழலையே தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்கிறார் என்றால் பவம் அவர் நிலைமையை பார்த்து கொள்ளுங்கள் ....
ReplyDelete