Saturday, June 25, 2011

தனுஷின் புதிய அவதாரம்!


சமீபகாலமாக நடிகர்களே தங்களது படத்திற்கு பாடல்கள் எழுதுகின்றனர். அந்தவரிசையில் கமல், சிம்பு ஆகியோரைத் தொடர்ந்து தனுஷூம் பாடல் ஆசிரியராக மாறியிருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சமீபத்தில் "ஆடுகளம்" படத்திற்காக, சிறந்த நடிகருக்கான, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த உற்சாகத்தில் இருக்கும் தனுஷ், தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும், "இரண்டாம் உலகம்" படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மருத்துவ கல்லூரி மாணவராக நடித்து வரும் தனுஷ், இந்தபடத்தில் இரண்டு பாடல்களுக்கு தானே வரியமைத்து, ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது, இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ் இரண்டு பாடல்களை தானே எழுதியுள்ளார். அதில் ஒரு பாடல் ஃபோக் சாங்காகவும்,  மற்றொரு பாடல் மெலோடியஸ் சாங்காகவும் இருக்கும். இந்த இரண்டு பாடல்களும் நிச்சயம் ரசிகர்களை கவரும். இதுநாள் வரை ஒரு சிறந்த நடிகராக ஜொலித்த தனுஷ், இப்போது இந்தபாடல்கள் மூலம் தன்னை ஒரு சிறந்த பாடல் ஆசிரியராகவும் நிரூபிக்க இருக்கிறார். தனுஷின் இந்த முயற்சிக்கு அவரது அண்ணன் செல்வராகவன் காரணம் என்றார்.

இதுநாள் வரை நடிகராக தன்னை காட்டி வந்த தனுஷ், சமீபத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "உன் மேல ஆ‌ச தான்...." என்ற பாடலை பாடி, தன்னை ஒரு பாடகராக காட்டி கொண்டார். இப்போது அதிலும் ஒரு படி மேலேபோய் பாடல் ஆசிரியராகவும் மாறியிருக்கிறார்.


No comments:

Post a Comment