Friday, August 26, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தனை செப்டம்பர் 7ம் தேதிக்குள் தூக்கிலிட சிறை அதிகாரிக்கு கடிதம்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  மூவருக்கும் தூத்குத்தண்டனை  தீர்ப்பு வழங்கியது கோர்ட்.  தண்டனை பெற்ற இவர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள்  மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர்.   இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

கருணை மனு நிராகரிப்பு பற்றிய  குடியரசுத்தலைவரின் முடிவு பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசு மூலம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முருகன், சாந்தன், பேரறிவாளனிடம் நாளை சிறை நிர்வாகம் இந்த தகவலை தெரிவிக்கும்.  




No comments:

Post a Comment