Monday, August 1, 2011

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை


மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு..அழகிரியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அழகிரியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் ராஜேந்திரன்.   இவர் அரசு போக்குவரத்து ஊழியர்.   மதுரையைச்சேர்ந்தவர்.


இவர் கடந்த ஆண்டு போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.  ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே மதுரையில் பங்குதாரர்களுடன் இணைந்து சன் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்தார்.

இந்நிலையில்  இறந்து போன பங்குதாரரின் மனைவியை மிரட்டி டிரைவிங்க் ஸ்கூலை எழுதி வாங்கியதாக ராஜேந்திரன் மீது போலீசில் புகார் வந்தது.

இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை ராஜேந்திரனை கைது செய்தனர்.

அதிகாலை முதல் இன்று இரவு வரை விசாரனை நீண்டுகொண்டே போகிறது.     டிரைவிங்க் ஸ்கூல் சம்பந்தமாகவும்,   அழகிரியிடம் கார் டிரைவராக பணி புரிந்தபோது எங்கு எங்கெல்லாம் சென்றீர்கள், அழகிரியின் மனைவி காந்தி எங்கெல்லாம் சென்றார் என்று போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகிறார்கள்.

கார் டிரைவர் கைது செய்யப்பட்டதால் அழகிரி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.



No comments:

Post a Comment