Saturday, August 27, 2011

ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது

 திருவாரூர் அருகே 8 வயது சிறுவனை ஹோமோ செக்ஸுக்காக கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காணூரை சேர்ந்தவர் காமராஜ். தினக்கூலி தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மதன், மாஸ் என 2 மகன்கள் உள்ளனர். மாஸ் அதேபகுதியில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.

காமராஜும், கலையரசியும் வழக்கம் போல வேலைக்கு சென்றனர். இரவு 2 பேரும் வீடு திரும்பிய போது மூத்த மகன் மதன் மட்டும் இருந்தார். மாஸை காணவில்லை. அப்பகுதியில் தேடிய போது, அங்கு உள்ள வாய்க்காலில் முங்கில் செடி அடியில் மாஸ் பிணமாக கிடந்தான்.

இது குறித்து மன்னார்குடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் வழக்கு பதிந்து விசாரித்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கல்லூரி மாணவர் ஜோதி ராமலிங்கம் என்பவர், ஹோமோ செக்ஸுக்ற்கு ஒத்துழைக்காத சிறுவன் மாஸை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோதி ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.




No comments:

Post a Comment