Tuesday, August 30, 2011

'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !


நீண்ட நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த கமலின்  'விஸ்வரூபம்' படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஜேப்பியார் காலேஜில் நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட செட் போடப்பட்டு அங்கு கமல் நடிக்கும் காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார்கள். சோனாக்ஷி சின்ஹா கதாநாயகி என்று துவங்கப்பட்டு,  இப்போது அனுஷ்கா உள்பட பல நாயகிகளிடம்  கால்ஷீட் கேட்டு வருகிறார்கள்.

அனுஷ்கா இப்படத்திற்கு எப்படியாவது தேதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்று நினைத்தாலும், தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடித்து வரும் படத்தின் தேதிகளும் இப்படத்தின் தேதிகளும் ஒன்றாக இருக்கிறதாம். ஆகையால் அனுஷ்கா நடிப்பதும் இப்போது கேள்விக் குறியாகி விட்டது.

இந்நிலையில் 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்ட ஏமி ஜாக்சனை வேறு ஒரு பாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

படத்தின் கதைக்கு ஏற்ப ஒரு வெளிநாட்டு நடிகை தேவையாம். அதற்காக அவரை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது கமலின் தங்கையாக நடிப்பதற்கு நடிகை தேர்வு நடைபெற்று வருகிறதாம்


No comments:

Post a Comment