Monday, August 1, 2011

சூர்யா படம்... டாப்ஸி விலகினாரா விலக்கப்பட்டாரா?


எந்த நிருபரைப் பார்த்தாலும், சூர்யா படத்திலிருந்து நானாகத்தான் விலகிவிட்டேன். விரைவில் மீண்டும் ஜோடி சேர்வேன் என்று கூறி வருகிறார் ஆடுகளம் நாயகி டாப்ஸி.

உண்மையில் என்ன நடந்தது?

சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை கே.வி. ஆனந்த் ஆரம்பிக்க முடிவு செய்து ஹீரோயின் வேட்டையில் இறங்கிய போதுதான், டாப்ஸி நடித்த ஆடுகளம் வெளியானது. மாற்றான் ஹீரோயினாக டாப்ஸியை போட முடிவு செய்தனர்.

ஆனால் படம் வசூல் ரீதியாக சுமாராகத்தான் போனது. ஹீரோயினைப் பொருத்தவரை, 'ஆள் வெள்ளையாக இருந்தாலும் அம்சமாக இல்லை' என்று படக்குழுவினர் சொல்ல, உடனே மேக்னா ராஜை நடிக்க வைக்க முயற்சித்தனர்.

மேக்னாவும் இயக்குநர் கேவி ஆனந்த்தை சென்னையில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு என்ன நடந்ததோ, ஹீரோயினாக காஜலை முடிவு செய்தனர்.

இந்த செய்தி வெளியாகி தனது மார்க்கெட் பாதிக்குமே என்ற பயத்தில், மாற்றான் படத்தில் என்னை யாரும் விலக்கவில்லை. எனக்கு நிறைய படம் இருக்கு. நான் ரொம்ப பிஸி. அதனால்தான் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் சூர்யாவுடன் கண்டிப்பாக நடிப்பேன், என்றெல்லாம் கூறி வருகிறார் டாப்ஸி.

இதையெல்லாம் படித்துவிட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கிறது மாற்றான் யூனிட்!


No comments:

Post a Comment