விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, August 28, 2011

    அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.


    தேர்தல் தோல்வி, ஸ்பெக்ட்ரம் விவகாரம், நில அபகரிப்பு வழக்குகள், உட்கட்சி பூசல் என, பல்வேறு விவகாரங்களில் சிக்கித் தவிக்கும் தி.மு.க.,வை, சட்டசபையிலும், கூட்டணியிலும் காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., கட்சிகள் தனிமைப்படுத்தியுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளாக ஏழு கட்சி கூட்டணி, வெற்றி கூட்டணி என, வலம் வந்த தி.மு.க., ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிலைகுலைந்து விட்டது. கட்சியின் கொள்கை பரப்பு செயலர், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைதானார்; சொந்த, "டிவி'யின் தலைமை நிர்வாகி சரத்குமார், சி.பி.ஐ., வலையில் சிக்கினார்.


    தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே, அவரது மகள் கனிமொழி எம்.பி., கைதாகி சிறை சென்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பேரன் தயாநிதி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து, கட்டாய ராஜினாமா செய்து வைக்கப்பட்டார். இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளில் சிக்கியுள்ள தி.மு.க., நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து, உட்கட்சி பூசல் வெடித்து, கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்விகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்தன. இதற்கிடையில், புதிய அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அடுக்கடுக்காக நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி வருகின்றனர்.


    வழக்குகளால் துவண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சி விதிப்படியும், கோவையில் தி.மு.க., பொதுக்குழு கூடியது. இதில், அடுத்த தலைவர் யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமலே, அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்து வேறுபாடுகளுடன், கூட்டம் முடிந்தது. இத்தனை சிக்கலிலும், காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., ஆகிய தி.மு.க., கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வை கண்டு கொள்ளவில்லை. "இனி தி.மு.க.,வுடன் கூட்டணியில்லை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்து விட்டார். வி.சி.,யோ, வாயையே திறக்கவில்லை. சமச்சீர் கல்வி விவகாரத்தில், சட்டசபையிலிருந்து தி.மு.க., வெளிநடப்பு செய்தபோதும், வெளியே போராட்டம் நடத்தியபோதும், காங்.,கும், பா.ம.க.,வும் தி.மு.க.,வை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி கொண்டன.


     தலைமை செயலக புதிய கட்டட முறைகேடு புகார் குறித்து, விசாரணை கமிஷன் அமைத்தபோதும், தலைமை செயலக புதிய கட்டடத்தை, மருத்துவமனையாக்கும் அறிவிப்பு வெளியான போதும், தி.மு.க.,வுக்கு, காங்., - பா.ம.க., கட்சிகள் எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லை. இதேபோல், சட்டசபையில் துரைமுருகனை பேச அனுமதிக்காதது, ஒரே இடத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு இடம் ஒதுக்காததால், தி.மு.க.,வினர் செய்த வெளிநடப்பு போன்ற பிரச்னைகளிலும், காங்., - பா.ம.க., கட்சிகள், சட்டசபையில் தி.மு.க.,வை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிவிட்டது. தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும், சித்திரை முதல் நாளாக்கும் மசோதாவிலும், தி.மு.க.,வுக்கு காங்., ஆதரவு தெரிவிக்கவில்லை. 


    அ.தி.மு.க., அரசின் 100வது நாளில், "நல்ல திட்டங்கள் செய்யும் அரசு' என, பா.ம.க.,வும், காங்.,கும் புகழ்ந்துள்ளன. இப்படி, பல பிரச்னைகளில் கூட்டணி கட்சிகளால், தி.மு.க., தனித்து விடப்பட்டுள்ளது. இதனால், தொண்டர்களும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது,"கூடா நட்பு கேடாய் முடியும்' என, எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது, காங்கிரஸ் விஷயத்தில் சரியாகவே நடந்து விட்டது. காங்கிரசின் முன்னாள் அமைச்சர் இளங்கோவன், தி.மு.க.,வை விமர்சித்தபோது, அவராகத்தான் விமர்சிக்கிறார் என, நினைத்தோம். ஆனால், அவர் மேலிட உத்தரவுப்படிதான் பேசியிருக்கிறார் என, இப்போதுதான் தெரிகிறது. பா.ம.க., - வி.சி.,யை பொறுத்தவரை, எப்போதுமே அணி மாறிகள்; அவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை' என்றார்.


    சிறையில்... சிறையில் : சேலத்தில் கொடிகட்டி பறந்த வீரபாண்டி ஆறுமுகம் சிறையில், திருச்செந்தூரில் தி.மு.க.,வுக்கு கொடி பிடித்த அனிதா ராதாகிருஷ்ணன் சிறையில் உள்ளார். மதுரையின் அஞ்சா நெஞ்சனாக பேசப்பட்ட அழகிரியின் வலதுகரமாக செயல்பட்ட தளபதி, பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி ஆகியோர் சிறையில் உள்ளார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., பிரமுகராக திகழ்ந்த ரங்கநாதன் சிறையில், கருணாநிதியின் வசனங்களை சினிமா தயாரித்த லாட்டரி அதிபர் மார்ட்டின் சிறையில், "சன் டிவி' நிர்வாகி சக்சேனா சிறையில் உள்ளார். தென்சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் அன்பழகன் சிறையில் உள்ளார். தஞ்சை மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா சிறையில் உள்ளனர். திருச்சியில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் நேரு, அன்பில் பெரியசாமி என, தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான பலர் சிறைகளில் தள்ளப்பட்டனர். இதில், தளபதி, அன்பழகன், ராஜா உள்ளிட்ட சிலர் மட்டும் ஜாமினில் வந்துள்ளனர்.


    Posted by விழியே பேசு... at 9:25 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
View mobile version
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ▼  August (478)
      • நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்ச...
      • மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?
      • விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடி கைது- ஆயிரக...
      • கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறு...
      • ரூ. 6 லட்சம் கொடுத்தால் ஆடலாம், குடிக்கலாம்-செக்ஸு...
      • தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் ...
      • விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை தடைவிதித்த நாயகன் யார்?
      • மணிரத்னம்-அஜீத் சந்திப்பு புதுப்பட பேச்சு வார்த்தையா?
      • விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்க...
      • பாம்பும் கீரியுமாக இருந்த எடியூரப்பா-குமாரசாமி இடை...
      • ஐகோர்ட்டில் பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு விடை...
      • மங்காத்தா ரிலீஸ்.. அதிரடி வெற்றி!
      • தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்தூக்குத்தண்டனைக்கு எதிர்...
      • ஜெயராமுடன் கமல் இணையும் அன்புள்ள கமல்
      • கிரேசி- கமல் கூட்டணியில் புதிய படம்
      • உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கண...
      • இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதே...
      • வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ பு...
      • கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்
      • குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்...
      • பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து...
      • விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்...
      • மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் த...
      • ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான ஆதாரம் இல்லை...
      • செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ...
      • ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு ஆடிப்போகும் தயாரிப்பாளர...
      • ஒன்று வாங்கினால் ஒன்று வசந்தபாலன் வளைத்த அஞ்சலி
      • கார்த்திக் மகனோடு கமலின் கமலின் 2-வது வாரிசு அக்ஷர...
      • ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்...
      • ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்...
      • 9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அ...
      • இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...
      • பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட தடை விதித்த...
      • தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்...
      • பெண் மெய்க்காப்பாளர்களை பலாத்காரம் செய்த கடாபி, மக...
      • 'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !
      • தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
      • இன்று விசாரணை- தூக்கிலிட தடை விதிக்கப்படுமா?
      • வேலாயுதம் பாடல்கள் டவுன்லோட்
      • மணி இயக்கத்தில் அஜீத் ?!
      • லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ராவின் கண...
      • ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு ...
      • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆர...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆப...
      • திருமண நிச்சயதார்த்தம்... வருவாரா ரஜினி?
      • ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
      • ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் காப்பாற்...
      • சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம்
      • உடல், உயிர் மட்டுமே நினைவுக்கு வந்தது: பணம் புகழ் ...
      • திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான்...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்...
      • மதுரையில் விஜய்: வரவேற்க அனுமதி மறுப்பு: இவ்வளவு ப...
      • விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்...
      • விஜயின் வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா போட்டோ, வீ...
      • நான் எடுத்த முடிவு முடிவுதான்: மதுரையில் நடிகர் வி...
      • எந்த தெய்வமும் கண்ணை குத்தாது: விஜயகாந்த்
      • நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயி...
      • நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வை...
      • தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! ப...
      • கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கி...
      • என் தந்தையைக் காக்க தமிழகம் வந்து போராட விரும்புகி...
      • இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!
      • அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்திருப்பது தோல்விதான்?
      • ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்...
      • மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
      • அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.
      • முதலில் யாருக்கு தூக்கு?
      • அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றி :...
      • உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்காதீங்க! : ஹசா...
      • மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா
      • இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்...
      • சிறை to கோர்ட் செல்லும் வழியில் பொட்டுசுரேஷ் வைத்...
      • வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!
      • ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வ...
      • ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
      • பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆ...
      • ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
      • சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்...
      • இந்தியா முழுவதும் தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உ...
      • வெளிஉலகை பார்க்க ஆசையாக உள்ளது: முதல்-அமைச்சரின் க...
      • நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்
      • ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது
      • உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ்...
      • 100 நாட்களில் கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி ...
      • புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimeste...
      • தூக்குக்கு நாள் குறிப்பு- முருகனை சந்திக்க அனுமதிக...
      • எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை ச...
      • அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு ...
      • மீண்டும் பழைய கணவருடன்... வனிதா விஜயகுமாரின் மாற்றம்
      • சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு?
      • நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற...
      • அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை
      • கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!
      • மங்காத்தா பிரச்சினை: 'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு ...
      • அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு...: நடிகர் விவேக்
      • "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்': அழகிரி விரக்தி
      • டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு: அ.தி.மு.க. ஆதரவு
      • விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.