Saturday, August 27, 2011

மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா


 போலீஸ், கோர்ட், கேஸ் என குடும்ப தகராறை சந்திக்கு இழுத்த நடிகை வனிதா விஜயகுமார், குடும்பத்துடன் சேர்ந்துவிட்டார். மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும், 2வது கணவரை துண்டித்து விட்டு மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் கடந்த ஒரு வருடமாக சுழன்று அடித்துக் கொண்டிருந்த புயல் ஓய்ந்திருக்கிறது. விஜயகுமார் - மஞ்சுளா நட்சத்திர தம்பதி மகள் வனிதா. டி.வி. நடிகர் ஆகாஷை காதலித்து மணந்தார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான்.

சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மகன், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த வனிதா, ஆனந்தராஜன் என்பவரை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜோவிகா என்ற 6 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில், மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு கணவரிடமும் பெற்றோரிடமும் தகராறு செய்து, திடீர் போராட்டத்தில் குதித்தார் வனிதா. போலீசில் அடுத்தடுத்து புகார்கள் கொடுத்தார். மகனை தன்னிடம் ஒப்படைக்க கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் இருவரிடமும் மகன் மாறி மாறி இருக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், அம்மா வனிதாவிடம் மகன் செல்ல மறுத்துவந்தான் அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஆகாஷ் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருந்தார் வனிதா. பரபரப்பான இந்த பிரச்னை இருவரது வீட்டிலும் புயலை கிளப்பியது. பிரச்னைகளுக்கு தீர்வு இல்லாமல் நடிகர் விஜயகுமார் குடும்பத்தினர் கவலையில் இருந்தனர். இப்போது வனிதா போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2வது கணவர் ஆனந்தராஜை விட்டு பிரிந்து முதல் கணவர் ஆகாஷிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமின்றி, குடும்பத்தினருடன் சுமுக உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுபற்றி வனிதா நிருபர்களிடம் இன்று கூறியதாவது: சமீபத்தில் அப்பா விஜயகுமாரை சந்தித்து பேச வீட்டுக்கு சென்றேன். அவர் இல்லை. அம்மா மஞ்சுளா இருந்தார். என்னிடம் அன்பாக பேசினார். நான் சந்திக்க வந்தது பற்றி அப்பாவிடம் அம்மா கூறியிருக்கிறார். அப்போது, என்னிடம் பேச விரும்புவதாக அம்மாவிடம் அப்பா சொல்லியிருக்கிறார். ஆனந்தராஜன் என்னை பிரிந்து சென்று ஒரு மாதம் ஆகிறது. இருவரும் புரிதல் அடிப்படையில் பிரிந்துவிட்டோம். இதையடுத்து ஆகாஷை (முதல் கணவர்) நேரில் சந்தித்து அவரிடம் எனது தவறுக்கு மன்னிப்பு கேட்டேன்.

எங்களுக்குள் இப்போது ஈகோ இல்லை. கோபத்தில் நான் அவரை அவமானப்படுத்தியதை பொருட்படுத்தாமல் என்னிடம் அன்பாக பேசினார். அதேபோல் என் மகன் விஜய்ஸ்ரீஹரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அவன் சிறியவனாக இருக்கலாம். தவறு செய்தது நான் என்பதால் வயதை பொருட்படுத்தாமல் காலில் விழுந்தேன். குடும்பத்துடன் சேர்ந்திருக்கிறேன். என் மகள் ஜோவிகாவும் ஆகாஷிடம்தான் வளர்கிறாள். தங்கையிடம் விஜய் ஸ்ரீஹரி அன்பாக பழகுகிறான். நானும் ஆகாஷூம் சேர்ந்து வாழ்வோமா? இல்லையா? என்பது தெரியாது.

அதுபற்றி பேசவில்லை. என் மகன் என்னை ஒதுக்கிவிடக் கூடாது. பெண்கள் என்றாலே அவனுக்கு பிடிக்காமல் போய்விடக் கூடாது என்பதால் இந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டேன். இவ்வாறு வனிதா கண்ணீர்மல்க கூறினார்.


No comments:

Post a Comment