Thursday, August 25, 2011

அன்னா ஒரு ஊழல்வாதி என்றதற்காக மன்னிப்பு கேட்ட காங்

 ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவே ஒரு ஊழல்வாதி தான். அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு போராடுகிறார் என்று கூறியதற்காக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியதாவது,

ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவே ஒரு பெரும் ஊழல்வாதி. அவரின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊழல் தான். அப்படி இருக்கையில் அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.

அன்னா ஊவல்வாதி என்று நாங்கள் சொல்லவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி உலக நடப்பு பற்றிய அவரது பார்வை மங்கிவிட்டது என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அன்னா ஆதரவாளர்கள் மனிஷ் திவாரியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மனிஷ் திவாரி அன்னா பற்றி கூறியதற்கு பிராயசித்தமாக அவர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று நடிகர் அனுபம் கேர் தெரிவித்தார்.

இப்படி நாலா பக்கமும் எதிர்ப்பு கிளமபவே இன்று மனிஷ் திவாரி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.




No comments:

Post a Comment