Saturday, October 29, 2011

7ஆம் அறிவு ,வேலாயுதத்தோடு மோத வரும் படங்கள்


தீபாவளி தினத்தன்று தமிழ் திரையுலகம் எதிர்பார்த்த 'ஏழாம் அறிவு', 'வேலாயுதம்' என இரண்டு படங்கள் வெளியாகி விட்டன.

இதனால் மற்ற தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை எப்போது வெளியிடலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள். ஒரு சில தயாரிப்பாளர்கள்  தங்களது படங்களின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'மயக்கம் என்னரிலீசுக்கு 11/11/11 என்ற தேதியை தேர்ந்தெடுத்து உள்ளது.

சிம்பு நடிக்கும் 'ஒஸ்தி18/11/11 அன்று வெளியாக இருக்கிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் 'போராளி' 25/11/11 அன்று வெளியாக இருக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ராஜபாட்டை' 16/12/11 அன்று வெளியாக இருக்கிறது.

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடிக்கும் 'வேட்டை23/12/11 அன்று வெளியாக இருக்கிறது.

இப்படி அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்து, ரசிகர்களை பிஸியாக்குகிறார்கள் தயாரிப்பாளர்கள்.


No comments:

Post a Comment