Friday, October 28, 2011

கமல் இயக்கத்தில் இயக்குனர் !


மன்மதன் அம்பு' படத்தினை தொடர்ந்து கமல் நடித்து வரும் படம் 'விஸ்வரூபம்'. இப்படம் ஆரம்பிக்க தாமதம் ஆனாலும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தில் தனது பாத்திரத்திற்காக கெட்டப்பை மாற்றி இருப்பதால் எந்த ஒரு திரையுலக விழாவிலும் கமல் கலந்து கொள்ளவில்லை. ராகுல் போஸ் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இந்தி இயக்குனரான ( 'பூலான் தேவி' பட இயக்குனர் ) சேகர் கபூரை  'விஸ்வரூபம்' படத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இது குறித்து சேகர் கபூர் தனது டிவிட்டர் இணையத்தில் " எனது பழைய நண்பர் கமல் இயக்கும் 'விஸ்வரூபம்' படத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment