Saturday, October 29, 2011

நடிகை அஞ்சலிக்கு மிரட்டல்: நடிகர் கரண் கண்டனம்


நடிகர் கரண்-அஞ்சலி ஜோடியாக நடித்த படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். இப்படத்துக்கு குமரி மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள தமிழ் நாடு லயன் பால் அசோசியேஷன் அமைப்பு படத்தின் தயாரிப்பாளர் செந்தில்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கரண் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டம் கேரள எல்லையில் வாழ்ந்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் வாழ்க்கையை படமாக்கி உள்ளோம். நான் வெட்டோத்தி சுந்தரமாக நடித்துள்ளேன். இதன் படப்பிடிப்பிலேயே சிலர் கலாட்டா செய்தனர். அஞ்சலியை தாக்க முயற்சி நடந்தது. இந்த படம் குமரி மாவட்டங்களின் பெருமையை சொல்லும். எவ்வித அவதூறான காட்சிகளும் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

வருகிற 10-ந்தேதி படத்தை வெளியிட உள்ளோம். இந்த நிலையில் இப்படத்தை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது போராட்டம் நடத்துவது என சிலர் ஈடுபட்டு உள்ளனர். எங்களை மிரட்டுகிறார்கள். படத்தில் யாரையும் புண் படுத்தவில்லை. திட்ட மிட்டபடி படம் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் வடிவுடையான் கூறும்போது குமரி மக்களையும் மண்ணையும் அடையாளப்படுத்தும் படமாக இருக்கும் தவறுதலாக எந்த காட்சியும் இல்லை என்றார்


No comments:

Post a Comment