Saturday, October 29, 2011

கமலை இயக்க போவது உண்மையா : வெங்கட்பிரபு பேட்டி


'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றி வருகிறார் கமல். தனது மகள் முதன் முறையாக தமிழில் நாயகியாக அறிமுகமாகும் 'ஏழாம் அறிவு' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட வரவில்லை.

தனது மகளுக்கு ஆடியோ செய்தி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் டாக் என்னவென்றால் கமலும் - இயக்குனர் வெங்கட்பிரபுவும் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள் என்பது தான்.

கமலும் வெங்கட்பிரபுவும் சந்தித்து பேசியதாகவும், வெங்கட்பிரபு கதை சொன்னவுடன் கமல் அது எந்த ஆங்கில படத்தின் தழுவல் மற்றும் அப்படத்தின் கேமராமேன் யார் மற்ற டெக்னிஷியன்கள் யார் போன்றவற்றை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் " நான் கமல் சாரை சந்திக்கவில்லை. சந்தித்தால் தானே அவருடன் படம் பண்ணப் போவது பற்றி பேச முடியும் " என்று தெரிவித்து இருக்கிறார்.


No comments:

Post a Comment