விஷ்ணுவர்த்தன் தெலுங்கில் இயக்கி வரும் படம் 'பாஞ்சா' (PANJAA). பவன் கல்யான் நாயகனாக நடித்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
தமிழிலும் 'பாஞ்சா'வை டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கில் பவன் கல்யாண் பாத்திரத்திற்கு அஜீத் டப்பிங் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
'பாஞ்சா' டப்பிங் குறித்து அஜீத்திடம் கேட்டதற்கு " அச்செய்தி உண்மையல்ல" என்று மறுத்து இருக்கிறார். அஜீத் 'பில்லா - 2' படப்பிடிப்பை முடித்தவுடன் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

No comments:
Post a Comment