விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' படத்தினை தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் பாலா. இப்படத்தின் நாயகனாக அதர்வாவும், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தில் டெக்னிஷியன்களை மாற்றி இருக்கிறார் பாலா.
பாலா இயக்கத்தில் வெளியான ' நான் கடவுள்', 'அவன் இவன்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆர்தர் ஏ.வில்சன்.
தற்போது பாலா இயக்க இருக்கும் படத்திற்கு செழியனை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்து இருக்கிறார். இவர் ஏற்கனவே தாமிரா இயக்கிய 'ரெட்டச்சுழி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இதுவரை பாலா படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் சுரேஷ் அர்ஸ். புதிய படத்தின் எடிட்டராக T.E. கிஷோரை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் பாலா. 'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங்கிற்காக தேசிய விருது பெற்றவர் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன் உடனுக்குடன் எடிட்டிங் செய்ய இருக்கிறாராம் கிஷோர். இதற்காக 2 படங்களின் எடிட்டிங்கை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்.

No comments:
Post a Comment