Monday, November 28, 2011

பாடல்களே இல்லாத அபாயம் படம்!


பாடல்களே இல்லாமல் தமிழில் புதிய படம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. பசுபதி மே/பா ராசக்காபாளையம், கனகவேல் காக்க, காதல் கதை ஆகிய படங்களை தயாரித்த ஜே.சதீஷ்குமார் அடுத்து தயாரித்து வரும் படம், "அபாயம்." இந்த படத்தில்தான் பாடல்களே கிடையாது. நரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். சுப்பிரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஷெரீன், சத்யபிரகாஷ், ஷபீ ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்க, கிருஷ்ணவம்சி இயக்குகிறார். இப்படம் குறித்து டைரக்டர் கிருஷ்ணவம்சி அளித்துள்ள பேட்டியில், `இன்றைய இளையதலைமுறையினரின் இரவு நேர பொழுதுபோக்கு மது, மாது என்று விரிவடைந்துள்ளது. அப்படி உல்லாசமாக இருந்த ஒரு கும்பலை போலீஸ் துரத்த, அந்த கும்பல் அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் அடைகிறது. அங்கே அவர்கள் சந்திக்கும் திகிலான அனுபவங்கள்தான் படத்தின் கதை, என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment