Sunday, November 27, 2011

சச்சின் சதம் மிஸ் குரங்கு கொரில்லாவாக மாறிவிட்டது: ரவிசாஸ்திர கமெண்ட்


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மும்பையில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் நேற்று சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்ட மஞ்ச்ரேக்கர் கூறுகையில், சச்சினின் 100வது சதம் இன்னும் காத்திருக்கிறது. அந்த குரங்கை (சதத்தை) அவர் நிச்சயம் முதுகில் இருந்து கீழே இறக்க வேண்டும்.  அப்போதுதான் அணிக்கும் நல்லது. ஒருநாள் தொடரில் அவர் சதம் அடித்தால்தான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சச்சின் நம்பிக்கையுடன் செயல்பட முடியும் என்றார். இதற்கு பதில் கூறிய ரவிசாஸ்திரி, குரங்கு தற்போது வளர்ந்து கொரில்லாவாக மாறியுள்ளது என்றார்.


1 comment: