Sunday, November 27, 2011

சமுத்திரகனியின் சாட்டை


`மைனா' படத்தை அடுத்து பிரபு சாலமனின் சாலோம் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் சார்பாக ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம் `சாட்டை' இந்தப் படத்தில் சமுத்திரகனி, யுவன் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் தம்பி ராமய்யா நடிக்கிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். பாவா லட்சுமணன், தனம்பிரேம், ஹலோ கந்தசாமி, பாண்டி, லெனின், விக்னேஷ்வர், ரவி, ஜுனியர் பாலையா, முரளி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வாத்தியார் மாணவன் நல்லுறவை கருவாக வைத்து தயாராகிறது. படப்பிடிப்பு 40 நாட்கள் நெய்வேலி பகுதியில் நடைபெற்றது. ஏழு பள்ளி கூடங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் 1000 பேர் பங்கு பெறுவது போன்ற நிகழ்ச்சி ஒன்றில் "அன்புருண்டை கண்ணழகி அய்யா ரெட்டு நெல்லழகி'' என்ற பாடல் காட்சியில் யுவன்- மகிமா நடனமாட, சமுத்திரகனி உள்பட பலர் பங்கு பெற்றனர்.

ஒளிப்பதிவு: ஜீவன், பாடல்கள்: யுகபாரதி, இசை: இமான், நடனம்: நோபல், ஸ்டன்ட்: மைனா முருகன் எடிட்டிங்: தாஸ், தயாரிப்பு நிர்வாகம்: சண்முகம், தயாரிப்பு மேற்பார்வை: செந்தில், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்: எம்.அன்பழகன். இரண்டாம் கட்ட படிப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment