Friday, December 23, 2011

வெங்கட்பிரபு - சூர்யா : 3D!


 'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஸ்டூடியோ கீரின் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு. இதில் நாயகனாக சூர்யா நடிக்க இருக்கிறார்.

தனது அடுத்த படம் குறித்து வெங்கட்பிரபு கூறியிருப்பது " எனது அடுத்த படம் கண்டிப்பாக தமிழ் பட ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும்.  சூர்யாவிடம் ஒரு வரிக்கதை கூறினேன் அவருக்கு அக்கதை பிடித்து இருந்தது.

தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். இதுவரை வெளிவந்த இந்தி படங்கள் அனைத்துமே சாதாரண கேமராவில் எடுத்துவிட்டு அதனை 3D வடிவத்திற்கு மாற்றுவார்கள்.

ஆனால் எனது படத்தினை இயக்கும் போதே அதனை 3D கேமராவில் ஷுட் செய்ய இருக்கிறோம். இதற்காக வெளிநாட்டில் இருந்து பல்வேறு கலைஞர்கள் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து இறுதி நாள் படப்பிடிப்பு வரை கூடவே இருப்பார்கள்.

என்னுடைய முந்தைய படங்களை போலவே யுவன் இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். வேறு யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 2012ல் இதற்கான முறையான அறிவுப்பு வெளிவரும் " என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment