Saturday, December 24, 2011

அரவான் பட கதைக்கு சாகித்ய விருது!


டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் அரவான் படத்தின் மூலக்கதைக்கு சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரவான் பட யூனிட்டே இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறது. வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் அரவான் படத்தின் மூலக்கதை சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. மதுரையே சேர்ந்த இந்த வெங்கடேசனுக்கு சாகித்ய விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகமிக இளம் வயதில் அதாவது 39வது வயதில் இந்த விருதினை பெரும் தமிழ் இலக்கியவாதி இவர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, சு.வெங்கடேசன் எழுதியிருக்கும் முதல் நாவலும் இதுதான் என்பது கூடுதல் தகவல். தங்களது பட மூலக்கதைக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கும் சந்தோஷத்தை அரவான் யூனிட்டும் கொண்டாடி வருகிறது.


No comments:

Post a Comment