Friday, December 30, 2011

தனுஷ் இல்லை.. கார்த்தி !


தமிழில் மட்டுமல்ல இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் கூட ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். காட்சியை தனது கேமரா கோணத்தில் அழகுப்படுத்துவதில் வல்லவர் இவர்.

சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' படத்தில்  ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு பாராட்டை பெற்றது. இந்நிலையில் தனுஷ் நாயகனாக நடிக்கஒரு படத்தை இயக்க இருக்கிறார் ரவி.கே.சந்திரன் என தகவல்கள் வெளியாகின.

அத்தகவலை மறுத்தார் ரவி.கே.சந்திரன். ஆனால் தான் படம் இயக்க வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.

தான் தயாராக வைத்து இருக்கும் காதல் கலந்த ஆக்ஷன் கதைக்கு கார்த்தி பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறாராம். எனவே தற்போது 'சகுனி', சுராஜ் இயக்கி வரும் படம் என பிஸியாக இருக்கும் கார்த்தியை அணுகி, கதை சொல்லியிருக்கிறாராம் ரவி.கே.சந்திரன்.


No comments:

Post a Comment