Sunday, December 25, 2011

ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?


சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க எப்போதும் ரெடியாகவே இருக்கிறேன் என்று அசின் கூறினார். சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக அசின் நடிக்க இருந்ததாகவும் கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அசினிடம் கேட்டபோது கூறியதாவது: கோச்சடையானில்நடிக்க மறுத்தேனா என்பதை அதன் தயாரிப்பாளரிடம்தான் கேட்கவேண்டும். இதுபற்றி இப்போது நான் கருத்து சொல்ல முடியாது. ஆனாலும் நல்ல புராஜக்ட் அமைந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷை காதலிக்கிறீர்களா என்கிறார்கள். இந்தி சினிமாவில் கிசுகிசுவை கேட்டு காது புளித்துவிட்டது. நான் எப்போதும் வெளிப்படையானவள். யாரையும் காதலித்தால் நேரடியாகச் சொல்லிவிடுவேன். இப்போது அக்ஷய்குமார், ஜான் ஆபிரகாமுடன், ‘ஹவுஸ்புல் 2’, அஜய்தேவ்கன், அபிஷேக் பச்சனுடன், ‘போல் பச்சான்ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு அசின் கூறினார்.


No comments:

Post a Comment