Friday, January 20, 2012

பூக்கடை - இல்லை !


மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கார்த்திக் மகன் கெளதம் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்கு மணிரத்னம் 'பூக்கடை' என பெயரிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த சதீஷ் என்பவர் 5 வருடங்களுக்கு முன்னரே 'பூக்கடை' என்ற பெயரை தான் இயக்க இருக்கும் படத்திற்கு பதிவு செய்து வைத்து இருக்கிறார்.

இதனால் 'பூக்கடை' தலைப்பு தன்னுடையது என மணிரத்னம் மீது சங்கத்தில் புகார் அளித்தார்.

ஆனால் மணிரத்னம் தரப்பிலிருந்து 'படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்க கூட இல்லை. ஆகையால் 'பூக்கடை' என்ற தலைப்பு எங்களுக்கு தேவையில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment