Saturday, January 21, 2012

கொலவெறி குழுவோடு இணையும் ஆஸ்கர் விருது பெற்றவர் !


Slumdog Millionaire படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார். அப்படத்தின் இசைக் கோர்ப்பு பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தில் இவரது வேலையை திரையுலகினர் பாராட்டினார்.

தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் ' 3 ' படத்திற்கு சவுண்ட் எஞ்சினியராக பணியாற்ற இருக்கிறார் ரசூல் பூக்குட்டி.

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி தனது டிவிட்டர் இணையத்தில் " கொலவெறி குழுவினர்களான தனுஷையும், அனிருத்தையும் நேற்று சந்தித்தேன்.  திறமைசாலிகளான அவர்களோடு 3 திரைப்படத்தில் பணிபுரிய இணைவதில் மகிழ்ச்சி " என்று தெரிவித்து இருக்கிறார்.

ஆஸ்கர் விருது வென்றவர் தங்களது படத்தில் பணியாற்ற சம்மதம் தெரிவித்து இருப்பதற்கு 3 படக்குழுவினர் தங்களது டிவிட்டர் இணையங்களில் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment