Monday, January 2, 2012

வில்லன் வேடத்தில் அமிதாப் பச்சன்!


நடிகர் ஜீவா மற்றும் நடிகை கார்த்திகா நாயர் பத்திரிக்கையாளராக நடித்து வெளிவந்த படம் கோ”. இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது.



 இப்போது இந்த படத்தை இந்தியில் சத்தியாகிரகாஎன்ற பெயரில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்தியில் இந்த படத்தை பிரகாஷ்ஜா இயக்குகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சனை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்ட இயக்குனர், அமிதாப்பை கோ படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த முதலமைச்சர் கதாபாத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.



 பிரகாஷ்ஜா இதற்கு முன் இயக்கவிருந்த படத்திற்கு சத்தியாகிரகா என்று பெயர் வைக்க முடிவு செய்திருந்ததாகவும்,அந்த படம் கைவிடப்பட்டதால் இந்த படத்திற்கு அந்த பெயரை வைத்து விட்டு, படத்தில் வரும் பத்திரிக்கை நிறுவனத்தின் பெயரை சத்தியாகிரகா என்று வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்


No comments:

Post a Comment