Tuesday, January 24, 2012

இந்தி படத்தில் தனுஷ்


தனுஷ் எழுதி பாடிய `கொலை வெறி' பாடல் வடநாட்டவர்களை கவர்ந்துள்ளது. அமிதாப்பச்சன் நேரில் அழைத்து பாராட்டினார். அடுத்து இந்திப் பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆனந்த் எல். ராய் இயக்கும் `ராஞ்சனா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் எல்.ராய் கூறும் போது கடந்த ஆறு மாதமாக என் படத்துக்கு எளிமையான தோற்றத்தில் இருக்கும் நடிகரை தேடி வந்தேன். தமிழில் ரிலீசான தனுசின் ஆடுகளம் படம் பார்த்த போது கேரக்டருக்கு பொருத்தமானவர் அவர் தான் என முடிவு செய்தேன் என்றார். இந்தி படத்தில் நடிப்பது பற்றி தனுஷ் கூறியதாவது:-

இயக்குனர் ஆனந்த் சொன்ன கதை ரொம்ப பிடித்தது. சாதாரண சினிமா கதை போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குனர் ஆனந்துடன் பனாரஸ் சென்றேன். அங்குள்ள மொழி, கலாசாரங்கள், எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஊரின் அழகும் தெய்வீக தன்மையும் என்னை கவர்ந்தது. ஆசிரியர் வைத்து இந்தி கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளேன். படம் முடியும் முன் இந்தியில் பேச கற்றுக் கொள்வேன்.

இவ்வாறு தனுஷ் கூறினார்.


No comments:

Post a Comment