Tuesday, February 21, 2012

மைக்ரோசாப் விண்டோஸின் லோகோவில் மாற்றம்


மைக்ரோசாப்ட் நிறுவனம் தமது விண்டோஸ் மென்பொருளை மறுசீரமைப்பு செய்துள்ளது.

1985ஆம் ஆண்டு விண்டோஸ் லோகோ உருவாக்கப்பட்டது. 4 வண்ணக் கொடி பறப்பது போன்ற இந்த லோகோவில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வந்தது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய லோகோவுடன் விண்டோஸ் 8 வெளியாக உள்ளது.

புதிய லோகோ 4 வண்ண கொடி பறப்பதற்கு பதிலாக ஒரு ஜன்னலைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பெளவுல் ஸெர் என்பவர் வடிவமைத்துள்ளார்.

"விண்டோஸ் என்ற பெயருக்கேற்பவே சாப்ட்வேரின் லோகோவை வடிவமைத்திருக்கிறோம்" என்று மைக்ரோசாப்ட் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment