Friday, February 24, 2012

ரஜினியையும் சூர்யாவையும் மிஞ்சிய லாரன்ஸ் !


லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய் , கோவை சரளா நடித்து வெளிவந்த படம் 'காஞ்சனா'. இப்படத்தை லாரன்ஸ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் யார் நடிப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. சல்மான்கான், அமீர்கான், அஜய் தேவ்கான், சஞ்சய்தத், அக்ஷய் குமார் என பல்வேறு இந்தி திரையுலக பிரபலங்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபாஸ் - அனுஷ்கா நடித்து வரும் தெலுங்கு படத்தை இயக்கி வரும் லாரன்ஸ், அதன் பின்பு 'முனி -3' தொடங்க இருக்கிறார்.

'முனி - 3' படத்தில் லாரன்ஸ் தனது  தம்பியை நாயகனாக அறிமுகப்படுத்த இருக்கிறார். இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. 'முனி - 2 காஞ்சனா'படத்தில் நடித்தவர்களே இப்படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'காஞ்சனா' படம் சத்தமில்லாமல் எந்திரன், சிங்கம் உள்ளிட்ட படங்களின் சாதனையை முறியடித்து இருக்கிறது. டி.விக்களில் TRP ரேட்டிங்கில் எந்திரன் (18), சிங்கம் (20) புள்ளிகள் தான் வந்தனவாம். ஆனால் 'காஞ்சனா' சன் டி.வியில் போட்ட அன்று வந்த TRP ரேட்டிங் 22 என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment