Thursday, February 23, 2012

வேலைக்காரியை கற்பழிக்க முயன்ற நீதிபதி


ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கிங்கின் ஜமெட்ல தன்டா பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர். இவர் சட்டபள்ளி நகரில் உள்ள கோர்ட்டில் சிவில் நீதிபதியாக உள்ளார்.

இவரது வீட்டில் ரமா (பெயர் மாற்றம்) என்பவர் வேலைக்காரியாக உள்ளார். இவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். இதனால் நீதிபதி பாலசந் தருக்கு மோகம் ஏற்பட்டது. அவளை எப்படியாவது அடைய திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் ரமா மட்டும் தனியாக இருந்தார். பாலசந்தரின் குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீதிபதி பாலச்சந்தர் ரமாவை கற்பழிக்க முயன்றார். அப்போது அவரது பிடியில் இருந்து தப்பி ரமா வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடினார்.

பின்னர் இதுபற்றி கம்மம் டி.எஸ்.பி. ரங்கன்கவுடுவை சந்தித்து நீதிபதி மீது புகார் கொடுத்தார். இதையடுத்து சட்டபள்ளி போலீசார் பாலச்சந்தர் மீது 354-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையறிந்ததும் நீதிபதி ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்று விட்டார். அவரை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.


No comments:

Post a Comment