Sunday, February 19, 2012

நாடகங்களை நான் நம்புவதில்லை-சசிகலா அழுகை குறித்து கருணாநிதி


நான் நாடகங்களை நம்புவதில்லை என்று பெங்களூர் தனி கோர்ட்டில் சசிகலா கொடுத்த வாக்குமூலம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி வந்த அவர் அங்கு கே.என்.நேரு மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்நதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடராஜன் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி வருந்தத்தக்கது என்று பதிலளித்தார்.

சசிகலா பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தான்தான் அனைத்துக்கும் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தற்போது நான் நாடகங்களை நம்புவதில்லை என்றார் கருணாநிதி.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதை மையமாக வைத்து பிரசாரம் செய்யப் போகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,

ஆளும் கட்சியின் அராஜகம், அக்கிரமம், மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேவையற்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவது, தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றியுள்ளது. இவை குறித்து பிரச்சாரம் மேற்கொள்வோம் என்றார் கருணாநிதி.


4 comments:

  1. உங்களைப் பார்த்து எல்லோரும் நடிக்கக் கற்றுக் கொண்டார்கள்.உண்ணாவிரத நடிப்பு பலே ஜோர் தலைவா,இல்லை பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் பொய்யா.

    ReplyDelete
  2. nice info gan, visit me
    http://www.centplay.com/affiliate/id_1198/

    ReplyDelete