Wednesday, March 21, 2012

என் மனைவி அவன் காதலி


வானம் பிலிம்ஸ் சார்பில் உருவாகும் படம் என் மனைவி அவன் காதலி. இதில் புதுமுகங்கள் ரவிகிருஷ்ணா நாயகனாகவும், சில்பா நாயகியாகவும் நடிக்கின்றனர். நிஷா, அயூப்கான், ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு திரைக்கதை எழுதி தேசிகன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். நாயகனும், நாயகியும் உயிருக்குயிராய் காதலிக்கின்றனர். காதலை ஏற்காத நாயகியின் பெற்றோர் அவளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்துக்கு பின் மீண்டும் பழைய காதலனை சந்திக்க நேர்கிறது. அப்போது அவள் மனதில் ஏற்படும் மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையில் படமாக்குகிறோம்.

முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்காடு, சேலம் பகுதியிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.


No comments:

Post a Comment