Thursday, March 1, 2012

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை: இந்திய அணிக்கு பின்னடைவு


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் கடந்த வாரம் 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலிருந்த இந்திய அணி, தற்போது 117 புள்ளிகளுடன் 3-ம் இடம் வகிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்ததால் இந்திய அணிக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் 2-வது இடத்தை 117 புள்ளிகள் பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி ஆக்கிரமித்துள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 117 புள்ளிகள் பெற்றிருந்தாலும் தசம புள்ளிகள் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா 2-ம் இடத்திலுள்ளது.

129 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இலங்கை, இங்கிலாந்து அணிகள் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.


No comments:

Post a Comment